« Home | உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 3   8. குடும்... » | உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 2   1. முதல் மன... » | உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 1   ஒருமுறை இயக்க... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... »

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 1
 
பஞ்ச் வசனங்கள்
 
"வரலாறு என்பது வந்த வழி. பயணங்களின் கூட்டுத்தொகை தான் மனிதர்களின் வரலாறு"
"தரவுகளால் வரலாற்றை கட்டமைக்காவிட்டால் கட்டுக்கதைகள் வரலாறு என்ற பெயரில் உங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும். You can't do anything about it."
“சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே”
"காப்பாற்றப்பட வேண்டியது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டுமல்ல கடந்த காலமும் தான்".
"வரலாறு என்பது மக்களின் வரலாறு. மக்களின் வரலாறே வரலாறு மற்றதெல்லாம் வரப்புத் தகராறு"
"வரலாறு என்பது உறைப்பனி அல்ல, ஓடும் நதி! வரலாறு என்பது உறைந்த பனி அல்ல, ஓடும் நதி! History is evolving and ever flowing stream."
"கீழடி என்பது வேறொன்றுமில்லை இன்னும் முழுவதுமாக தோண்டப்படாத சங்க இலக்கியம்.
சங்க இலக்கியம் என்பது வேறொன்றுமில்லை இன்னும் முழுவதுமாக வாசிக்கப்படாத கீழடி"
"சங்க இலக்கியம் என்பது ஒரு மீள் நினைவு இலக்கியம்"
“வரலாறு என்பது உரிமை. சலுகை அல்ல”.
"முதல் மூன்று நூற்றாண்டுகளில் 300 ஆண்டுகளில் தெற்காசியாவில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் 40 விழுக்காடு தமிழ் நூல்கள்."
"ஒரு நாட்டினுடைய ஒட்டுமொத்த வரலாறு என்பது வட்டார வரலாறுகளின் (Local History) கூட்டுத்தொகையாத்தான் இருக்கணும். Local History should be the building block for National History. அதில் விளிம்பு நிலை மனிதர்களுடைய வரலாறு இருக்கணும். The people from the fringes, voices of the voiceless அவர்களுடைய வரலாறு பேசப்பட வேண்டும்."
 
General Sir John Marshall
1924ல செப்டம்பர் 20 ஆம் தேதி ஜென் சார் ஜான் மார்ஷல் இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் வீக்ல அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்காவிட்டால் நம்முடைய வரலாறு வேற மாதிரி இருக்கும். அந்த வரலாறுல ஹரப்பா இருக்காது. முகஞ்சோதரா இருக்காது. கீழடி இருக்கவே இருக்காது. வேதங்கள் இருக்கும். ஆக, அந்த வரலாற்றை புரட்டிப் போட்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது.
ஜான் மார்ஷல் அவர்கள்தான் வேத காலத்திற்கு முந்தைய நாகரீகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை கண்டறிந்து அந்த நாகரீகம் திராவிட இனக் குழுவை சார்ந்தது என்ற கருத்தை தெரிவிக்கிறார். இந்தக் கருத்தை தான் இன்றும் மேலும் உறுதிப்படுத்துவதற்கு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் அகழ்வாராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
ஆர் பாலகிருஷ்ணனை பற்றி
நான் ஒரு சாதாரண பள்ளியில் படித்து ஒரு சாதாரண கல்லூரியில் படித்து யாரும் படிப்பதற்கு "பயப்படுகிற" தமிழ் இலக்கியத்தை படித்து வேறு எந்த தேர்வையுமே என் வாழ்க்கையில் எழுதாமல் ஒரே ஒரு முறை ஒரே ஒரு தேர்வுக்காக விண்ணப்பித்து ஒரே முறை எழுதி ஒரே ஒரு முறை நேர்காணலுக்கு டெல்லிக்கு முதன்முதலாக சென்று ஐஏஎஸ் வாங்கி எத்தனையோ பேர் சொல்லியும் பத்திரிக்கை துறையில் பணியாற்றி "தமிழ் மாணவர் நீங்க ஐஏஎஸ் ஆயிட்டீங்க!அதனால இங்க வந்து போகும்போது முதலமைச்சரை பார்த்துவிட்டு செல்லுங்கள் மீதி எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். கட்டாயம் நீங்கள் தமிழ்நாட்டில் தான் வேலை பார்க்க வேண்டும்" என்று சொல்லியும் கூட அவரை பார்க்காமல் மசூரிக்கு சென்றேன். ஏனென்றால் நான் தமிழ் படித்தவன் என்பதை எந்த வகையிலும் ஒரு சலுகையாக பயன்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் I am succumb to none ! நான் யாருக்கும் சளைத்தவன் இல்லை ! என்பதில் உறுதியாக இருந்ததால் என்னை இந்தியாவுல தானே போஸ்டிங் போட போறாங்க இந்தியாவில் எங்கிருந்தாலும் நான் வேலை பார்ப்பேன் என்று ஒரிசாவுக்கு போய் அங்கு ஒரிசா மாநிலத்தினுடைய பண்பாட்டுச் செயலாளராக நான்கு ஆண்டுகள் இருந்து நிதித்துறை செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி மொத்தம் எட்டு பட்ஜெட்ல ஒர்க் பண்ணி இருக்கேன்.
 
இந்திய பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சி
ஐஐடில இருந்து எனக்கு ஒரு விருது கொடுக்கிறேன்னு சொன்னா வேண்டாம்னு விரட்டி விட்டுருவேன். ஏனென்றால் இந்த நாட்டில் இப்போது அறிவியல் தொழில்நுட்பக் கழகங்களில் அறிவியல் மனப்பான்மை (Scientific Temperament) குறைந்து அவர்கள் வரலாற்றில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள், it's none of their business.
உலக பட்டியலை நீங்க கூகுள் செய்து பாருங்க. உலக நாடுகளின் பட்டியல்ல தலைசிறந்த உயர்நிலைக் கல்லூரிகள் அதாவது பல்கலைக்கழகங்கள் இந்த நிறுவனங்களை பாருங்க. கடந்த எட்டு ஆண்டுகளாக முதல் 150 பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கூட இல்லை. ஐஐடி ஐஐஎம் எல்லாம் சேர்ந்து ஒரு நிறுவனம் கூட இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு பின்னால் (2024 ஆண்டின் நிலவரப்படி) ஒரு 10 15 நாளைக்கு முன்னால தான் ரிசல்ட் வந்தது. ஐஐடி பாம்பே 149 ஆ வந்திருக்கு.
 
( Deepseek query string: Which college institution of India ranks in the top 150 among world's best college institutions in 2024 )
 
 
 

Locations of visitors to this page