« Home | ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின்... » | ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு... » | உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 3   8. குடும்... » | உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 2   1. முதல் மன... » | உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 1   ஒருமுறை இயக்க... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... » | <!-- HTML Codes by Quackit.com --> <!DOCTYPE html>... »

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 3
 
வரலாறும் பயணமும்

தமிழ்நாட்டுல 14 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுல பஞ்சம் புழைக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான பேர் உலகம் ஃபுல்லா கொண்டு போய் விட்டிருக்காங்க. ஒப்பந்த கூலியும் அடிமை முறையில அடிமை வணிகம் நடந்திருக்கு. தமிழ்நாட்டுல இருந்து அங்க போகும்போது அடிமைகளா போனப்ப அவங்களோடு சேர்ந்து போன சாமி யாரு ? பிரசன்ன வெங்கடாஜலபதியா ரங்கநாதரா? இல்லை!முனியாண்டி, மாரியம்மா, காளியம்மா, அங்காள பரமேஸ்வரி இப்படியாதான் போயிருக்காங்க.
 
வரலாறு என்பது வந்த வழி !
பயணங்களின் கூட்டுத்தொகை தான் மனிதர்களின் வரலாறு !!
 
இந்த வரலாற்றுக்கான ஆபத்து ஒரே ஒரு முனையிலிருந்து வருவதாக நான் நினைக்கவில்லை. வரலாற்றுக்கு ஒரு ஆபத்து இருக்குன்னு சொன்னா அந்த வரலாற்றை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் அது நீங்கள் எதிரியாக சித்தரிக்கிற ஒரு ஒற்றை முனை பற்றியது அல்ல! உங்களை சுற்றி இருக்கிற வட்டத்தைப் பற்றியதும் கூட. வரலாற்றுக்கான உண்மையான தரவுகளுக்கான விரோதிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். உங்களுக்கு ரொம்ப பக்கத்திலேயே இருக்காங்க. உங்கள் அருகிலே உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் நீங்கள் வரலாற்றை காப்பாற்ற வேண்டும். நான் என்ன சொல்ல விரும்புறேன் கேட்டீங்கன்னா, தரவு சார்ந்து இயங்கணும்.
 
வரலாறு என்பது வெறும் மண் சார்ந்ததா ?அல்லது மனிதர்கள் சார்ந்ததா ?
 
இந்த தெளிவில்லாமல் வரலாறு பற்றி பேசவே முடியாது. பயணங்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு. மனிதகுல வரலாறு என்பது பயணங்களின் கூட்டுத்தொகை.
 
பாதையை விட முக்கியம் பயணம். எந்த ரூட்ல போனாங்கிறதை விட பயணம் Journey is more important. பயணத்தை விட முக்கியமானவன் பயணி. பயணம் என்ன பெரிய பயணம், பயணி எங்கெங்க போயிருக்கான், மெக்ஸிகோக்கு போயிருக்கான், 600 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் அடிமைகள் மெக்ஸிகோல போய் வேலை பார்த்திருக்கான், 400 ஆண்டுகளுக்கு முன்னால் Fiji தீவுக்கு போயிருக்கான். உலகத்தினுடைய எல்லா மூலைகளிலும் அவன் பயணித்திருக்கிறான். வாழ்க்கை அவனை தள்ளியது திசைகள் என்பவை நேற்று வந்தவை. தேடல்கள் மனிதனின் உடன் பிறந்தவை !
 
சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு
 
எங்களுடைய ஆசிரியர் ஐராவத மகாதேவன் கூட சொல்றாரு ஏன் 'திராவிட கருதுகோள்' என்று சொல்றீங்க 'திராவிடமே' சொல்லுங்கள். ஏனென்றால் சிந்து மொழி பொறிப்புகளை ஒரு இருமொழி பொறிப்புகளின் துணையோடு வாசித்து ஒருவன் உலகத்திற்கு அறிவிக்கும் வரை 99% அப்படி ஒரு டவுட்டை கிரியேட் பண்ணி இதுதான் என்ற சூழலை பண்பாட்டு தரவுகள் பன்முகத் தரவுகள் மரபணு தரவுகள் தொல்லியல் தரவுகள் இதையெல்லாம் சேர்த்து வச்சு உருவாக்கி அந்த இடத்துல வந்து நிறுத்திரனும். அதுக்கு பின்னால அதை மக்கள்ட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டிய வேலையை இயக்கத்தை சார்ந்தவர்கள் அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பொதுமக்களிடம் எடுத்துட்டு போகணும். என்னை போன்ற ஆய்வாளர்கள் இதுதான் முடிஞ்ச முடிவு அப்படின்னு சொன்னா I take a side, no researcher takes a side. ஒரு தகுதி உள்ள எந்த ஆய்வாளரும் இதுதான் வசதியாக ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க மாட்டான்.
 
பாலகிருஷ்ணனை பற்றி
 
நான் வந்து படிச்சிட்டு, ஆசிரியரா போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு முனைவர் ஆகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு, ரிசர்ச் பண்ணாம நான் வெளிய ஓடி போயிட்டேன். ஒரு ₹240 சம்பளத்துக்கு பத்திரிக்கையாளரா போயிட்டேன். பத்திரிக்கையாளரா இருந்து அங்க இருந்து ஐஏஎஸ் போயிட்டேன். ஆனா தொடர்ந்து ரிசர்ச் பண்ணிட்டே இருக்கேன் நான் சொல்லிட்டு தான் போனேன் எங்க ப்ரொபசர்ட்ட I will not do PhD research but I will spend my entire life in doing research.
 
அகழாய்வுகளின் அவசியம்
 
1930களில் தீட்சித் என்பவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு உரை நிகழ்த்துறார். அது 1939ல புத்தகமா வருது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதை ஒட்டிய பகுதிகளில் பண்டைய துறைமுகமான பகுதிகளில் முழுமையான அகழாய்வுகள் செய்யப்பட வேண்டும். அத்தகைய அகழ்வாராய்ச்சிகள் சிந்துவெளி பண்பாட்டின் சமகால பண்பாடு அல்லது சற்று பிந்தைய காலகட்ட பண்பாடு என்று கருதத்தக்க ஒரு பண்பாட்டிற்கான தடையங்களை அளிக்கக்கூடும். இன்னைக்கு அவரது உரை முடிந்து 80 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு.
 
இரண்டாயிரத்துக்கு பிறகு தான் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி குறித்த முயற்சிகள் நடைபெறத் தொடங்கின. இடைப்பட்ட காலத்தில் ஏன் எந்த முயற்சியையும் யாரும் எடுக்கவில்லை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்
 

Locations of visitors to this page